பொள்ளாச்சி விவகாரம்! போராட்டத்தில் ஈடுபட்டவரை அறைந்த போலீஸ்!

468

பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாணவர் அமைப்பை சேர்ந்த அரவிந்த் சாமி என்பவரை எஸ்பி செல்வராஜ் கன்னத்தில் அறைந்து கலைந்து செல்லுமாறு கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of