பாலியல் வன்கொடுமையால் சிறுமி பலி – தந்தை கண்ணீர் பேட்டி

220

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, ஏம்பல் மேலகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நாகூரான்- செல்வி தம்பதியினரின் 7 வயது மகள் திடீரென மாயமானர்.

இதுகுறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று கிளவிதம்மம் பகுதியில் உள்ள  ஊரணியில், உடலில் காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட உடல்  புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of