வரியில்லாத முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

116

அரசின் வருவாய் மூலம், வரியில்லாத முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

2019 -20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு குறைவாக நிதி வழங்கினாலும், மாநில வருவாயைக்கொண்டு வரி விதிப்பு இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நாராயணசாமி, இந்த பட்ஜெட் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of