சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர்

547

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையின் கீழ் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தூய்மை சேவைத்திட்டத்தின் கீழ்
நகர்ப்பகுதிகளை சுத்தம் செய்யும் பணி முதல்வரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மழைக்காலம் தொடங்கும் முன்னர் சாக்கடைகளை தூர்வாரும் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று காலை நெல்லிதோப்பு அவ்வை திடல் பகுதியில் நடைபெற்ற சாக்கடையை தூர்வாரும் பணியை துவக்கி வைத்த முதல்வர், திடீரென சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் முதல்வரை ஆச்சரியத்துடன் பார்க்க, முதல்வரின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.