மகளிர் நிகழ்ச்சியில் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட முதல்வர்

154

புதுச்சேரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழாவில் கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கினார்.

புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, இந்த நிதி உதவியினை பயன்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ளும் மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும் என்று தெரிவித்தார்.

இறுதியாக பேசிய நாராயணசாமி, தாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்களது ஆதரவு என்றும் அதற்காக தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையை உயர்த்தி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கை சின்னத்தை காட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் ஆதரவு கோரியது மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரமாக அமைந்தது.