புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும்

694

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று புதுச்சேரி மருந்துக்கடை நல்வாழ்வு சங்கம் அறிவித்துள்ளது.

முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மருந்தகங்களின் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மருந்துக்கடை நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் ரவிச்சிந்திரன், செயலாளர் ரமேஷ் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மருந்துகள் அத்தியாவசிய தேவை என்பதால் மக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கோரிக்கை தொடர்பாக மத்திய அரசிடம் பேசி தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக புதுச்சேரி மருந்துக்கடை நல்வாழ்வு சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் மருந்துக் கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of