புதுச்சேரி அரசு கல்லூரியில் கூடுதலாக 130 மாணவர்களை சேர்க்க அனுமதி

740

புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 130 மாணவர்களை சேர்ப்பதற்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஆன்லைன் கலந்தாய்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக 100க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்களால் கல்லூரிகளில் சேர முடியவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகுதிவாய்ந்த மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 130 மாணவர்களை சேர்ப்பதற்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்று கூறினார். மேலும் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of