புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை

403

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட 14 வகையான எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of