புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

415

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களாக பகலில் கடுமையான வெயிலும், இரவு நேரத்தில் கனமழையும் பெய்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் புதுச்சேரி முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதாலும் புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.