முக்கிய சாலைகளுக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட புதுச்சேரி முடிவு

742

புதுச்சேரியின் முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்ட புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இரண்டரை மணி நேரம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, அமைச்சரவை கூட்டத்தில் 27 விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், மறைந்த கலைஞர் கருணாநிதியின் புகழை போற்றும் வகையில், புதுச்சேரி100 அடி சாலைக்கும், காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும் டாக்டர் கலைஞர் சாலை என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.

இந்நிலையில், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் கலைஞர் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

Advertisement