புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்..,

493

புதுச்சேரி சட்டசபை இன்று 11மணிக்கு கூடுகிறது – இடைக்கால பட்ஜெட் தாக்கல் முதல்வர் நாராயணசாமி அவர்கள் 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரி சட்டசபை கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி நடந்தது.

அன்றைய தினத்தில் சிறப்பு சட்டமன்றம் கூட்டப்பட்டது. அதில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கடுமையாக கண்டித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், இன்று 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சரும், நிதியமைச்சருமான நாராயணசாமி தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of