மக்கள் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் கிரண்பேடி தடுக்கிறார்

736

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் துறையில் காலியாக உள்ள 300 இடங்களை நிரப்புவதற்கு புதுச்சேரி அரசு முடிவு செய்து, இதற்கான வயது உச்சவரம்பு 24 வயது என நிர்ணயிக்கப்பட்டது என்று கூறினார்.

இதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதால் அவருக்கு கோப்பு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் நாடாளுமன்ற உள்துறை நிலைக்குழு காவல்துறை பணிக்கான ஆட்கள் தேர்வின் அதிகபட்ச வயது 22 என சிபாரிசு செய்திருந்ததை சுட்டிக்காட்டி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தர மறுத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதனால், காவலர்களுக்கான தேர்வு நடத்தும் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி உள்ளது என்றும், காவலர்பணிக்கான வயது வரம்பு 24ஆக வே இருக்க வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் விருப்பம் எனவும், அதை நிறைவேற்ற முடியாமல் துணை நிலை ஆளுநர் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் பிரநிதியாக செயல்பட வேண்டும் என்றும், ஆனால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்த நாராயணசாமி, அதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார் என்றும், அவருடைய செயல்பாட்டால் மக்கள் விரக்திக்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement