8 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

668

புதுச்சேரியின் 8 சட்டமன்ற உறுப்பினர்களை வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

ஆதாயம் தரும், வாரியத் தலைவர் பதவி வகிக்கும் புதுச்சேரியின் 8 சட்டமன்ற உறுப்பினர்களை வரும் 27 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது.

MLA-க்கள் வாரிய தலைவர்களாக பதவியேற்ற போது இரட்டை ஆதாயம் பெறும் பதவி வகிப்பதாக புகார் எழுந்தது.

இதனால் 8 MLAக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் MLA ஓம்சக்திசேகர் குடியரசு தலைவரிடம் மனு அளித்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 8 MLA-க்களும் மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பாக 8 MLAக்களும் அளித்த விளக்கத்தில் திருப்தியடையாத தேர்தல் ஆணையம், மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கத்தை உறுதிமொழி பத்திரத்தில் அளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

வருகிற 27 ஆம் தேதி தேர்தல் ஆணையம் முன், நேரிலோ அல்லது சட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் சம்பந்தப்பட்ட 8 MLAக்கள் மீது எந்த முன்னறிவிப்புமின்றி தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement