புதுச்சேரியில் 185.4 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது – பங்கஜ் குமார் ஜா

863

புதுச்சேரியில் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை185.4 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் பங்கஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.

மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் மாவட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று மாலை வரை உள்ள தகவல்களை மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி, பேரிடர் கால துறை இயக்குனர் பங்கஜ் குமார் ஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்கள்.

வானிலை ஆய்வு மையத்தின் படி நாளை முதல் புதுச்சேரியில் மழை குறையும் என்றும், 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை புதுச்சேரியில்185.4. மில்லி மீட்டர் மழையும், அதிக அளவாக காரைக்காலில் 253.2 மில்லி மீட்டர், மழை அளவு பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement