புதுச்சேரி : அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்

688

புதுச்சேரியில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த ஊழியத்தை உரிய காலத்தில் வழங்க வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்தில் புதுச்சேரியில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

100க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதேபோல் உள்ளூர் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of