புதுச்சேரியில் முதன்முறையாக சர்வதேச திரைப்பட விழா

546

புதுச்சேரியில் முதன்முறையாக சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இதன் அறிமுக விழா பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சர்வதேச திரைப்பட விழாவை அறிமுகப்படுத்தினார்.Narayanaswamy

அப்போது பேசிய அவர், திரைப்படங்களை பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை என்றும், இருப்பினும் செய்தி சேனல்களை பார்க்க தவறுவதில்லை என்று தெரிவித்தார்.

அரசியல்வாதியாக இருந்து கொண்டு செய்திகளை தெரிந்து கொள்ளாவிட்டால் அரசியலில் இருந்து தூக்கி எறியப்படுவோம் என்று கூறினார்.

இந்த திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக இன்று காலை தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு நாடுகளில் தேசிய விருதுகள் பெற்ற 124 படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of