உரிய உரிமம் இன்றி செயல்பட்டு வந்த தனியார் நட்சத்திர விடுதிக்கு, அதிகாரிகள் சீல்

313

புதுக்கோட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், உரிய உரிமம் இன்றி செயல்பட்டு வந்த உணவகத்திற்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள உணவகத்தில் காலாவதியான இறைச்சிகளால் ஆன உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்திய போது, காலாவதியான இறைச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், கடந்த ஓராண்டாக செயல்பட்டு வந்த, அந்த உணவகத்திற்கு உரிய உரிமம் இல்லாததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, அந்த உணவகத்தின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து, அந்த நட்சத்திர விடுதிக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of