IPl 2019: இவர் IPL-ல் இருந்திருக்க வேண்டும்.., கும்ப்ளே குமுறல்

660

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரடியை விருந்தாக வைத்து அவர்களின் கிரிக்கெட் பசியை தீர்த்து அதற்கு விலையாக பல கோடிகளை அல்லும் மிகப்பெரிய பணக்கார விளையாட்டாக ஐபிஎல் விளங்குகிறது.

இதில் விளையாட பல முன்னணி நாடுகளில் உள்ள வீரர்கள் இதில் கலந்து கொண்டு கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களும் பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி பல வீரர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிபடுத்த வாய்ப்பளிக்கின்றது.

ஆனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ‘தடுப்பு சுவராக’ விளங்கும் புஜாராவை எந்த அணி உரிமையாளர்களும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில், புஜாரா ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில்,

“இசாந்த் சர்மா திறமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய இரண்டையும் பெற்றுள்ளா். கடந்த சில வருடங்களாக அவர் டெஸ்ட் போட்டியில் மிகவும் அபாரமாக பந்து வீசியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாட அவர் தகுதியானவர். ஆனால் சில வீரர்கள் அணியில் இடம்பெறாதது துரதிர்ஷ்டவசமானது.

இந்திய டெஸ்ட் அணிக்காக மட்டும் விளையாடி வரும் இசாந்த் சர்மா மற்றும் புஜாரா போன்றோர் ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும். இறுதியாக இசாந்த் சர்மா அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்” என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of