பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக தாயகம் திரும்ப மத்திய அரசு உத்தரவு

1212

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்திய அரசும் பாகிஸ்தானுக்கு அளித்த “சிறப்பு அந்தஸ்தை” ரத்து செய்தது.இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதரை நேரில் வரவழைத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதர் அஜய் பிசாரியா-வை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்ததாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் சில ஆதாரங்களை முன்வைத்து இந்த பிரச்சனையை மையப்படுத்தி இந்திய தூதரகத்தின் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.