புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தானுக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து…,

777

இந்தியாவுக்கு எதிரி நாடாக இருந்தாலும் அண்டை நாடாக இருப்பதால் பாகிஸ்தானுக்கு “மிகவும் முக்கியத்துவமான நாடு” என சிறப்பு தகுதியை இந்திய அரசு 1996 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா  மாவட்டத்தில் நேற்று நடைப்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இது குறித்து டெல்லியிலல் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி கூறுகையில்,

இதுவரை பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட “மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கு முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது”. என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of