பாலியல் குற்றங்கள்! மற்ற நாடுகளில் வழங்கும் தண்டனைகள்!

405

பொள்ளாச்சியில் கயவர்களிடம் சிக்கிய பெண், அண்ணா பெல்டால் அடிக்காதீங்க, உங்களை நம்பி வந்த என்னை ஏன் இப்படி செய்றீங்க என்று கதறுவது, மனித பண்புள்ள அனைவரையும் பதற வைத்துள்ளது.

இந்த பாலியல் கொடூர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பாலியல் கொடூரன்களுக்கு இந்தியாவில் என்ன தண்டனை வழங்கப்படுகிறது? சில ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தான் வழங்கப்படுகிறது.

ஆனால் வெளிநாடுகளில் என்ன தண்டனை கொடுக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, நீங்களே முடிவு செய்யுங்கள் இந்த மனித மிருகங்களுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதை…….

சீனாவில் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்தால் குற்றவாளிக்கு உடனடியாக மரண தண்டனை அறிவித்து, பின்னர் குற்றவாளியின் பிறப்புறுப்பு துண்டிக்கப்படுகிறது.

ஈரானில் அதிகபட்ச தண்டனையாக பொது மக்கள் முன்பு சுட்டு தள்ளுகின்றனர் அல்லது தூக்கில் போடுகின்றனர். சிலருக்கு தண்டனை குறைக்கும் படியாக இருந்தால் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

நெதர்லாந்தில் பெண்களுக்கு எந்த விதமான பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டாலும் அது பாலியல் வன்புணர்வு வழக்காகவே கருதப்படுகிறது. பாலியில் குற்றங்களுக்கு கருணை காட்டப்படாமல் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

வடகொரியாவில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு இங்கு துளிகூட கருணை கிடையாதாம். பாதிக்கப்பட்டவரை வைத்தே சுட்டு தள்ளிவிடுகிறதாம் அரசு.

ஆப்கானிஸ்தானில் இங்கு நீதி என்பது பாதிக்கப்பட்டவரின் கையிலேயே கொடுக்கப்படுகிறது. நான்கு நாட்களுக்குள் பாலியல் வன்புணர்வு செய்தவரின் தலையில், பாதிக்கப்பட்டவர் சுட்டுத்தள்ள வேண்டுமாம்.

பிரான்ஸில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுவதுடன், அவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் . மேலும் வன்கொடுமையால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பொறுத்து 30 வருடங்கள் கூட தண்டனை கிடைக்கும்.

சவூதி அரேபியாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தீர்ப்பு வந்துவிட்டால், உடனடியாக மக்கள் முன்பு குற்றவாளியை கொன்று விடுவதுதான் இந்த நாட்டின் தீர்ப்பு.

எகிப்தில் மக்கள் முன் பாலியல் வன்புணர்வு செய்தவரை தூக்கில் இடுகின்றனர். அப்போதுதான் மக்கள் அதை பார்த்து அச்சப்பட்டு திருந்துவார்கள் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் குற்றவாளி என தீர்ப்பு வந்த ஏழே நாட்களுக்குள், தவறு செய்த அந்த நபரை தூக்கில் ஏற்றி கொன்றிருக்க வேண்டும்.

பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு தெற்கு ஆசியாவிலேயே மரண தண்டனை விதித்த முதல் நாடு பாகிஸ்தான். 1979ஆம் ஆண்டு அப்போதைய ராணுவத்தின் தளபதியாகவும், நாட்டின் ஆறாவது அதிபராகவும் விளங்கிய ஜியா உல் ஹக், முறை தவறிய பாலியல் உறவு கொள்பவர்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு கல்லால் அடித்தே கொல்லும் மரண தண்டனையை கொண்டு வந்தார்.

இது போன்று ஒவ்வொரு நாட்டிலும் கொடுமையான, கடுமையான தண்டனைகள் இருக்கத்தான் செய்கிறன. எந்த தவறு செய்தாலும் வெளியே வந்துவிடலாம் என்கிற தைரியத்தை அளிக்கும் வலிமையற்ற சட்டங்கள் இருக்கும் வரையில் தவறு செய்யும் எவரும் மாறப்போவதில்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of