மணமேல்குடியில் பயங்கரம் : பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் கொலை?

555

புதுகோட்டை: பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன் மாயமானார்.

போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், திருவரங்குளம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் மாரிமுத்துவின் கார் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

உறுதிப்படுத்தப்பட்டது

இதனிடையே வங்கியில் இருந்த 13.75 கிலோ தங்கநகைகளை மாரிமுத்து திருடிச் சென்றதாக தகவல் பரவியதால் பலர் ரசீதுகளுடன் வங்கியை முற்றுகையிட்டு தங்களது நகைகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனால் வங்கிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மணமேல்குடி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

உறுதிப்படுத்தப்பட்டது அந்த சடலம் மாரிமுத்துவுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி உட்பட குடும்பத்தார் அழைத்துவரப்பட்டு சடலம் அடையாளம் காணப்பட்டது. இதில் மீட்கப்பட்டது மாரிமுத்துவின் சடலம் என உறுதிப்படுத்தப்பட்டது.

marimuthu

கொலையாக இருக்கலாம் இந்நிலையில் மாரிமுத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரிமுத்துவின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் எலும்புகள் உடைந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

புதிய திருப்பம் ஏற்கனவே வங்கி ஊழியர்களே தமது கணவரை கொன்றிருக்கலாம் என மாரிமுத்துவின் மனைவி கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of