எல்லை வீரர்கள்.. போதைப் பொருட்கள்.. பாகிஸ்தான் ஆதரவு.. திடுக்கிட வைத்த சம்பவம்..

492

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டது.  அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவுடன், இதுபோன்ற கடத்தல் கும்பல் செயல்படுவதாக உளவுத்துறை தெரிவித்திருந்தது.

இந்த கும்பல் எல்லை வழியே இந்தியாவிற்குள் ஊடுருவி, போதை பொருட்கள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பஞ்சாப் போலீசார், எல்லை பாதுகாப்பு படை காவலர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த கும்பலுக்கு காவலர் சுமித் குமார்தான் தலைவன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட காவலரிடம் இருந்து, துருக்கி நாட்டில் தயாரித்த கைத்துப்பாக்கி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பெயர் பொறித்த தோட்டாக்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரே, வெளிநாட்டு ஆதரவுடன் ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.