குடும்பத்துல 9 ஓட்டு இருந்தும் 5 வாக்கு தானா? விம்மி விம்மி அழுத வேட்பாளர்!

1277

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் நீது சட்டர்ன் வாலா. இவர் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சுயோட்சையாக போட்டியிட்டார். நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் எதிர்பார்த்திருந்தார்.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில் அவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஆம், அவர் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“எனக்கு வெறும் 5 ஓட்டுக்களே விழுந்துள்ளது. என் குடும்பத்திலேயே வாக்காளர்கள் 9 பேர் இருக்கும் போது எனக்கு எப்படி 5 வாக்காளர்கள் விழும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர்கள் உங்கள் குடும்பத்திலேயே உங்களுக்கு ஆதரவு அளிக்காத நிலையில் மக்கள் ஆதரவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டனர்.

பின்னர் கண்களை துடைத்து கொண்டு இது நான் வெற்றி பெறக்கூடாது என்பதற்கான சதி”

என்று தெரிவித்தார்.

இதனை கேட்டு செய்தியாளர்கள் சிறிய நகைப்புடன் மீண்டும் தொடர்ந்தனர். என் குடும்பத்தினர் எனக்குத்தான் வாக்களித்திருப்பார்கள்.

அப்படியிருக்கும் போது வெறும் 5 வாக்குகள் கிடைத்துள்ளது என்றால் என்ன அர்த்தம், வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துவிட்டனர்.

என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of