டிக்-டாக் நடிகையான துணை முதலமைச்சர்..!

355

கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திரா மாநிலம் சட்டமன்றம் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.

அவரது அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள் பொறுப்பெற்றுள்ளனர். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவர் புஷ்பா ஸ்ரீவானி இவர் பழங்குடியினர் நலவாழ்வு துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் தற்போது உள்ளார்.

ஜெகன் மோகனை புகழும் ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா என்ற தெலுங்கு பாடல் ஒன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை புகழ்ந்து புஷ்பா  ஸ்ரீவாணி டிக்டாக்கில் பதிவு செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

துணை முதலமைச்சர் டிக்டாக்கில் விடியோ பதிவு செய்யலாமா..? என பல விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of