அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த், பிவி சிந்து

395

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி இந்தோனேசியாவைச் சேர்ந்த மவுலானா முஸ்தபாவை எதிர்த்து விளையாடினார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-18, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 22-20, 21-12 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.