“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala

232

திருவனந்தபுரத்தில் கக்கசுட என்ற பகுதியில் அடர்ந்திருந்த புதர்களை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பு ஒன்று தொழிலாளின் கழுத்தை சுற்றிக்கொண்டது. வலியால் அலறி துடித்துக்கொண்டிருந்த அவரின கழுத்தில் இருந்த மலைப்பாம்பை சக தொழிலாளர்கள் லாவமாக எடுத்து, சாக்குப்பையில் போட்டனர்.

பின்னர் தகவல் அறிந்த வந்த வனத்துறையினரிடம் மலைப்பாம்பை தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். நல்வாய்ப்பாக அந்த தொழிலாளி காயங்கள் இன்று தப்பினார்.