சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து

204

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றால் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து புறப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்றிதழ்களுடன் வருபவர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் தளர்வுகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் திட்டம் நேற்று முதல் சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.