ஷேர் சாட்டில் கசிந்த காலாண்டு தேர்வு வினாத்தாள்..? தமிழகம் முழுவதும் பரபரப்பு..!

333

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வின் வினாத்தாள்
இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான வினாத் தாள்கள் சேர் ஷாட் செயலி மூலம் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 ஆம் வகுப்பின் கம்ப்யூட்டர் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில் நேற்றே இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு முந்தைய வணிகவியல் தேர்வு நடைபெறுவதற்கு முன் தினமும் அதன் வினாத்தாள் கசிந்ததாகவும் தெரிவந்துள்ளது.

தற்போது இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் பள்ளி மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of