காலிறுதி போட்டியில் ஏமாற்றம் ! வெளியேறிய சிந்து மற்றும் சாய்னா

296

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் முன்னேறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. பிவி சிந்து காய் யன்யன்-ஐ எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 19-21, 9-21 நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

சாய்னா நேவால் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் சாய்னா முதல் செட்டை 13-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 23-21 எனக் கைப்பற்றினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் 16-21 இழந்து வெளியேறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of