யார் என்று கண்டுபிடியுங்கள்? கவிதை

91

யார் என்று கண்டுபிடியுங்கள்???

இவன் ஒரு வன்முறையாளன்
இவனில்லா நாடும் இல்லை
இவன் சந்திக்காத ஆளுமில்லை

இவன் இயற்கையின் கடைசிப் பிள்ளை
இவனால் என்றும் தொல்லை
இவனிருந்தால் போரில் போகும் வாழ்க்கை
இவன் சென்றால் பாரில் போகும் வாழ்க்கை

இவனே மூன்று எழுத்து முத்து
மொத்த உலகின் சொத்து
காதல் காதல் காதல்

– வைரமுத்து தாசன்