இடைத்தேர்தலில் தினகரனின் 20 ருபாய் சிஸ்டம் செல்லுபடியாகாது

384

வரும் இடைத்தேர்தலில், தினகரனின் 20 ருபாய் சிஸ்டம் செல்லுபடியாகாது என்று அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பூத் கமிட்டி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் இடை தேர்தலை பொருத்த வரையில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். இடைத்தேர்தலில் தினகரனின் 20 ரூபாய் சிஸ்டம் செல்லுபடியாகாது எனவும் கூறினார்.