அஜித் பட டைட்டிலை வைத்து உதாரணம் கொடுத்த அமைச்சர்..!

298

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் முதியோர் ஓய்வு ஊதியம் விபத்து காப்பீடு நிதி உள்ளிட்ட 13 நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மதுரை மக்கள் ஜல்லிக்கட்டு காளையை அடக்கக்கூடிய வீரம் மிக்கவர்கள், ஆனால் கொரோனா வைரஸ் பரவும் விவகாரத்தில் மிகவும் அலட்சியமாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

கொரோனா தொற்றை பொருத்தவரையில் வீரம் முக்கியமல்ல, விவேகம் தான் முக்கியம் எனவும் அமைச்சர் கூறினார்.

மதுரை மக்கள் வெளியே செல்லும்போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், தனிமனித சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.