முதியோர் உதவித்தொகை நேரில் சென்று வழங்கப்படும் – ஆர்.பி.உதயகுமார்

155

வரும் 11 முதல் 15ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை நேரில் சென்று வழங்கப்படும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாநில பேரிடர் மீட்புக் குழுவினருக்கு அறிவுரை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் 99 சதவீத மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது என்றும், இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of