நயன்தாரா குறித்து பேச்சு! சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!

1017

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என போற்றப்படுபவர். இவர் நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் நடிகர் ராதாரவி பங்கேற்று கொண்டு பேசினார். அப்போது அவர் நயந்தாரா குறித்து பேசியுள்ளது சர்ச்சை உண்டாக்கியது.

“நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. இத்தனை நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை.

அதையும் தாண்டி அவுங்க நிக்கிறாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க.

அப்போவெல்லாம் கடவுளாக நடிப்பதற்காக கே.ஆர்.விஜயா போன்றவர்களை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம்.

பார்த்தவுடனே கும்பிடறவங்களையும் போடலாமா, பார்த்த உடனே கூப்பிடுறவங்களையும் போடலாம்”

என ராதாரவி பேசியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of