பீர் குடித்ததால் வாய்ப்பு பறிபோனது! ராதிகா ஆப்தே ஓபன் டாக்!

655

கபாலி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்றை பெற்றவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், பீர் குடித்ததால் படவாய்ப்பை இழந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியிருப்பது பின்வருமாறு:-

“ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன்.

அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன். என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார்.

படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்.”

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.