“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..!

1729

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரலமான நாயகிகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில், கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மிகவும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இவர், சில படங்களில் நிர்வாணமாக இருப்பதைப்போன்று நடித்திருக்கிறார்.

இதனால் இவருக்கு பெரும்பாலும் விலை மாதுவாகவும், கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இதுகுறித்து ராதிகா ஆப்தே பேசும்போது, பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது என்று தெரிவித்தார்.

அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் ஆபாச கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன என்றும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன் என்று கூறினார்.

மேலும், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அதில் நடிக்க நான் விரும்பவில்லை எனவும் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.