“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..!

383

தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழித்திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ராதிகா. வெள்ளித்திரையில் மார்க்கெட் சரிய தொடங்கியதையடுத்து, சின்னித்திரையில் கால் பதித்த இவர் அங்கும் தனது ராஜ்ஜியத்தை தொடங்கினார்.

சித்தி என்ற ஒரே ஒரு சீரியலின் மூலம், தாய்மார்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ராதிகா. இந்த சீரியல் முடிவடைந்த பல ஆண்டுகளாகிய நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு ராதிகா சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் பேசிய அவர், இது எங்கள் நீதி படத்தில் விஜய்யுடன் தான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையன் என்றும், நடி, பாடு என அவரை மிரட்டுவேன். ஆனால், அவர் தற்போது இவ்வளவு பெரிய நடிகராக வருவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பவித்ரா என்ற படத்தில் நான் அஜித்துடன் இணைந்து நடித்தேன். அஜித் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும். மேலும், அஜித்தை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள் என நானே பல தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன் என்று ராதிகா தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of