புதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar

320

இயக்குனர் இமயம் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ராதிகா. ரஜினி,கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைத்து நடித்து அவரும் ஒரு முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 300-க்கும் படங்களில் ராதிகா நடித்துள்ளார்.

அண்மைய காலங்களில் படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தற்போது இவரது ‘மார்க்கெட் ராஜா MBBS’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியிருக்கிறார் ராதிகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.