“நான் தப்பிச்சிட்டேன்!” இலங்கை குண்டுவெடிப்பு குறித்து ராதிகா டுவீட்!

915

இன்று ஈஸ்டர் பண்டிகையினை ஒட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

இந்நிலையில் ஞாயிறு காலை 8.45 மணியளவில் அங்குள்ள கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர விடுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

இந்த குண்டுவெடிப்பூக்களில் சுமார் 150 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஞாயிறன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து தப்பினேன் என்று நடிகை ராதிகா சரத்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“அடக்கடவுளே! இலங்கையில் குண்டுவெடிப்பா? கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of