எக்காரணத்தைக் கொண்டும் ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது – அருண் ஜெட்லி

495

எக்காரணத்தைக் கொண்டும் ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கு கூட்டணி அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை விட தற்போது ரபேல் விமானம் மலிவாக வாங்கப்படுகிறது என்றும் இது தொடர்பான விலை மற்றும் உண்மை நிலவரங்கள் புள்ளி விவரங்களுடன் தலைமை கணக்குத் தணிக்கை துறையிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்த அவர், எக்காரணத்தைக் கொண்டும் ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of