ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு குற்றச்சாட்டு

421

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்புக் குற்றச்சாட்டை கூறியுள்ளது.

ரபேல் போர் விமான கொள்முதலில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ரபேல் போர் விமான பேரம் தொடர்பான முக்கிய அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் அவை மறைக்கப்பட்டு இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ராணுவ அமைச்சகத்திடம் இருந்த ரபேல் போர் விமான பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அதிமுக்கிய ரகசிய கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of