ரபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் – பிரான்ஸ் டசால்ட் நிறுவனம்

1037

ரபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிடமிருந்து மேலும் புதிய ஆர்டர்களை எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டசால்ட்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்று ரபேல் விமானங்கள் தயாராகும் இடங்களையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எரிக் ட்ரேப்பியர் அளித்துள்ள பேட்டியில், திட்டமிட்டபடி 36 ரபேல் விமானங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement