ரபேல் ஒப்பந்த முறைகேடு : மோடியும், 40 சகாக்களும் பதில் அளிக்க வேண்டும்

1065

ரபேல் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் கேள்வி எழுப்பினால் சேற்றை வாரி இறைப்பதா? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ரபேல் விமான விவகாரத்தில் காங்கிரஸ் – பா.ஜ.க இடையே வார்த்தை மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ரபேல் ஒப்பந்தத்தை சீர்குலைக்க ராகுல் காந்தி சர்வதேச சதியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் பலர் காங்கிரஸ் கட்சி மீது கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ரபேல் விமான கொள்முதல் ஊழல் குறித்து கேள்வி எழுப்பினால் மத்திய அரசு சேற்றை வாரி இறைப்பதாக தெரிவித்தார்.

இந்தியா அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற கதையை கேட்டிருப்பதாகவும், ஆனால் தற்போது மோடியும், 40 சகாக்களும் ரபேல் ஊழலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement