ரஃபேல் புத்தகம் பறிப்பு: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கண்டனம்

406

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான புத்தகத்தைக் காவல் துறையினர் பறித்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கே.பாலகிருஷ்ணன்: ரஃபேல் போர் விமான பேரத்தில் நடைபெற்ற முறைகேடுகளை தொகுத்து பாரதி புத்தகாலயத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதி பறக்கும்படை அதிகாரி எஸ்.கணேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பாரதி புத்தகாலயத்துக்கு வந்து புத்தக வெளியீட்டு விழா நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுத்து விட்டு புத்தகாலயத்திலிருந்த ரஃபேல் புத்தகப் பிரதிகள் அனைத்தையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அராஜகமானதாகும்.

இரா.முத்தரசன்: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவுக்குத் தடை விதித்ததுடன் அத்துமீறி புத்தகங்களையும் காவல்துறையினர் பறித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இது கருத்து சுதந்திரத்தின் மீது ஆளும்கட்சிகள் நடத்தும் அப்பட்டமான தாக்குதல். தேர்தல் நேரங்களில் புத்தகம் வெளியிடக் கூடாது என எந்த விதிமுறையும் இல்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of