கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என ஏன் சொல்லவில்லை..? ராகுல் காந்தி பளார் கேள்வி..!

148

கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என சீனவெளியுறவுத்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அஜித் தோவல் ஏன் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பிள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவலுக்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யி – உடன் பேசுகையில் கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை ஏன் கூறவில்லை என்று வினவியுள்ளார்.

20 பேர் உயிரிழப்பை சீனா நியாயப்படுத்துவதற்கு இந்தியா ஏன் அனுமதி அளித்தது என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய – சீன எல்லைப்பகுதியில் மோதலுக்கு முன்பிருந்த நிலையே நீட்டிக்கவேண்டும் என்று ஏன் அஜித்தோவல் வற்புறத்தவில்லை என்றும் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of