அவனியாபுரத்தில் சாம்பார் சாதம் சாப்பிட்ட ராகுல் காந்தி..!

1106

தமிழர்கள் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படுகிறது. இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட காங்கிரஸ் MP ராகுல் காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்திற்கு வந்து VIP பிரிவில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தார்.

அதன் பின் மக்களோடு மக்களாக அமர்ந்து சாம்பார் சாதம் மற்றும் அப்பளம் போன்றவற்றை சாப்பிட்டு விட்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement