காயம் அடைந்த பத்திரிக்கையாளர்கள்! உதவிக்கரம் நீட்டிய ராகுல்!

854

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து விட்டு திறந்த வாகனத்தில் தனது சகோதரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்தார்.

அவர்களுடன் செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் மற்றொரு திறந்த வாகனத்தில் சென்றனர். அந்த வாகனம் நிரம்பி வழிந்தது. அதில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி உடைந்து 5 பத்திரிகையாளர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த பத்திரிகையாளர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ராகுலும், பிரியங்காவும் உதவிக்கரம் நீட்டினர். ஒரு பத்திரிகையாளரை ஸ்ட்ரெச்சரில் (தூக்குபடுக்கை) படுக்க வைக்க ராகுல் உதவினார்.

காயம் அடைந்த பத்திரிகையாளர் ஒருவரின் காலணிகளை பிரியங்கா சேகரித்து எடுத்து கொடுத்தார். இது தொடர்பான காட்சி அடங்கிய வீடியோவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

Advertisement