சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி – சென்னையில் மாணவிகளிடையே உரையாற்றுகிறார்

295

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணியை அறிவித்துவிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், சிபிஐ ,சிபிஎம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of