காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி தகவல்! ராகுல் காந்தி..,!

636

பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று 8 மணியிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது.

துவக்கம் முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலை பெற்றார். அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் முன்னிலை பெற்றார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கத்தில் முன்னிலை பெற்றார்.

காலை 8.30 மணிக்கு பிறகு ராகுல் சற்று பின்தங்கினார். அதேசமயம் வயநாடு தொகுதியில் ராகுல் தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.